ஒரே நாளில் ரூ.360 குறைந்தது தங்கம்.. மீண்டும் 45 ஆயிரத்திற்குள் ஒரு சவரன்..!

வியாழன், 9 நவம்பர் 2023 (11:18 IST)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைந்துள்ளது அடுத்து மீண்டும் 45 ஆயிரம் தங்கம் விலை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் சரிந்து ரூபாய் 5615.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 சரிந்து ரூபாய் 44920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6085.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48680.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூபாய் 76.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்