இந்தியாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்திய அளவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் 12.35 சதவீதம் அளவுக்கு சரிந்து 6.88 லட்சம் கோடி முதலீட்டுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேசமயம் 7.40 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு இரண்டாம் இடத்தில் இருந்த டாடா கன்சல்டன்சி நிறுவனம் சரிவை சந்தித்து 7.06 லட்சம் கோடியாக உள்ளது.