எவ்வளவு தான் தாங்குறது? சிலிண்டரும் ஏறியாச்சு தங்க & வெள்ளியும் எறியாச்சு...

சனி, 7 மே 2022 (10:05 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, ரூ.4,877-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.66.80-க்கு விற்கப்படுகிறது.
இதே போல வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.965 என விற்பனையான நிலையில் தற்போது ரூ.1015 என விற்பனையாகிறது. 
 
வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை போல தங்க விலையும் எகிறிக்கொண்டே இருப்பதால் இல்லத்தரசிகள் உள்பட பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்