[$--lok#2019#constituency#tamil_nadu--$]
முக்கிய வேட்பாளர்கள்: சந்திரசேகர் (அதிமுக)- தொல்.திருமாவளவன் (விசிக)
சிதம்பரம் தொகுதியின் மக்கள் தொகை 18,19,435. இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,59,735 . ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,28,368. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,31,315 ஆகும். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரகாசி வெற்றி பெற்று எம்பியாக இருந்தார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரான தொல். திருமாவளவனை 1,28,495 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
[$--lok#2019#constituency#tamil_nadu--$]
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தமிழக பொறுத்தவரை அதிமுக, திமுக கட்சிகளே முக்கிய பெரிய கட்சிகளாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி 1 தொகுதியிலும் ( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி), பாமக (தர்மபுரி) ஆகிய தொகுதிகளில் வென்றனர்.