பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
பல ஆண்டுகளாக பட்டியல் சமுதாய மக்களின் பிரச்சனைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன். நான் போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் பட்டியல் இன மக்களுடன் அன்புடன் பழகிவருகிறேன்.
மோடி பிரதமரானால் நூறுநாள் வாய்ப்பு திட்டம் இல்லாமல் செய்து விடுவார் என்று ப. சிதம்பரம் கூறினார்.எனவே ப.சிதம்பரம் குடும்பத்துடன் மன்னிப்புக் கேட்க வேண்டும். கோர்ட்டில் 18 முறை முன் ஜாமீன் கேட்டு வருபவர் சிதம்பரம். இந்நிலையில் அவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாக்கு சேகரிக்கிறார் என்பதை மக்களுக்கு அவர் தெரிவித்தார்.