திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகள், மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் 1, ஐஜேகே 1 என பங்கிடப்பட்டுள்ளது. இவர்களது தொகுதி பங்கீடு எவ்வித பிரச்னைகளும் இன்றி எளிதாகவே முடிந்தது.
ஆனால் அதிமுக கூட்டணிக்கு ஆரம்பம் முதலே கூட்டணி விவகாரத்தில் சிக்கல்கள் இருந்தன. ஒரு பெரிய போராட்டத்திற்குபின் அதிமுக கூட்டணியில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும், தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை பாமக எதிர்கொள்கிறது. 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதி கொண்டதில் திமுகவிடம் 5 தொகுதிகளையும், ஒரு தொகுதியை விடுதலை சிறுத்தைகளிடமும் பாமக இழந்தது.