மொத்தம் ரூ.10,000 கோடி: தென்சென்னைக்கு ரூ.200 கோடி.. லிஸ்ட் போடும் ஜெயகுமார்

திங்கள், 1 ஏப்ரல் 2019 (16:00 IST)
வேலூரில் வருமான வரித்துறை அதிரடியாக நடத்தி வரும் சோதனையால் திமுக தரப்பு கலக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் திமுகவின் பணப்பாட்டுவாட லிஸ்ட்டை பட்டியலிட்டுள்ளார். 
 
அமைச்சர் ஜெயகுமார் கூறியதவாது, ரெய்ட் வந்ததும் உடனே இது திட்டமிட்ட சதி என துரைமுருகன் அன்று பேசினார். ஆனால், இப்போது கட்டுக் கட்டாக, கத்தை கதையாக, மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. 
 
இதைதான் கடந்த சில தினகங்களுக்கு முன்னரே கூறினேன், தமிழக்த்தில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி வீதம், ரூ.2,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ப்ளூ ஸ்கை ஆபரேஷன் என்று பெயர். நான் கூறியது இப்போது உண்மையாகிவிட்டது. 
ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.100 கோடி, குறிப்பாக சென்னையை பொருத்த வரை வட சென்னைக்கு ரூ.100 கோடி, மத்திய சென்னைக்கு ரூ.100 கோடி, தென் சென்னை சென்னைக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல திமுகவினரிடம் சோதனை மேற்கொண்டால் ரூ.10,000 கோடிகூட கிடைக்கும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்