இந்நிலையில் தற்போது மீண்டும் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகளால் பிரச்சாரத்திற்கு சரிவர செல்ல முடிவதில்லை, எனவே அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் துரைமுருகன் வீட்டில் வருமானவரி துறை சோதனை நடத்தி வருவதால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.