மேலும் அது வாட்ஸப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லிங்க் இல்லை என்பதையும் போலீசார் உறுதிபடுத்தினர். பொதுவாக சந்தேகத்தின் அடிப்படையில் பார்வேர்ட் மேசஜில் வருகின்ற லிங்க்கை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று ஏற்கனவே காவல்துறை தெளிவுபடுத்திய நிலையில் மீண்டும் இதனை போலீசார் உறுதிபடுத்தினர். மேலும் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர், கூகுள் போன்றவற்றில் உள்ள 'அப்'களை மட்டுமே பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் போலீசார் கேட்டு கொண்டனர்.