யுடியூபில் எப்போதுமே ஃபுட் ரிவ்யூ சேனல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். அதுபோல தமிழக இளைஞர்களிடம் பிரபலமாக இருந்து வருபவர் இர்பான். இவரின் இர்பான் வியூ சேனல் மூலமாக பல உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு ரிவ்யூ வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவரின் சேனல் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.