இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 30 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
எனவே 136 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் கில் மற்றும் வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மற்ற வீர்களும் அதிரடியாக விளையாட கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நடப்பு தொடரில் ஏற்கனவே சென்னை கிங்ஸ் அணியுடன் 2 முறை மோதி கொல்கத்தா அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.