நேற்றைய போட்டியில் தோனி அணியை தேர்வு செய்ததிலேயே தோல்வியை உறுதி செய்துவிட்டார் என்று தான் கூறவேண்டும். தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வரும் கேதார் ஜாதவ் மற்றும் பியூஷ் சாவ்லாவை அவர் ஆடும் அணியில் தேர்வு செய்தது மிகப் பெரிய தவறு என்றும் ஜெகதீசன், கெய்க்வாட், சாண்ட்னர் ஆகிய இளைஞர்களுக்கு வாய்ப்பு தராமல் பிடிவாதமாக மோசமாக விளையாடுபவர்களுக்கு தொடர்ந்து அவர் வாய்ப்பு கொடுக்கிறார் ஏன் என்பது புரியாத மர்மமாகவே இருக்கிறது என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
ஆனால் தோனி நேற்று போட்டி முடிந்ததும் அளித்த பேட்டியில், அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால் தான் அவர்களை களமிறக்கவில்லை. ஆனால், இனி வரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.