கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டி இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது. குவாலிபையர் 1 ல் மோசமாக தோற்ற டெல்லி அணி மும்பை அணி பழிவாங்க காத்திருக்கிறது. ஆனால் மும்பை அணியோ 5 ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளரும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனுமான ரிக்கி பாண்டிங் இந்த ஆண்டு சிறந்த சீசன். கோப்பையை வெல்வதற்குதான் நாங்கள் இங்கே வந்துள்ளோம். எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்களை எளிதாக நினைக்க வேண்டாம். முக்கியமான ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் எனக் கூறியுள்ளார். டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.