இர்பான் பதானின் கனவு அணியில் இடம்பிடிக்காத கோலி, தோனி & ரோஹித்!
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:20 IST)
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார்.
13 ஆவது ஐபிஎல் சீசன் கோலாகலமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் இதில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட கனவு அணியை பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானும் தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்திய அணியின் கேப்டன் கோலி, முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய யாருமே இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.