ஐபிஎல் போட்டியின் பிளே-ஆப் சுற்றுக்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏற்கெனவே தகுதி பெற்றன. அடுத்த இடத்தில் உள்ள கொல்கத்தா அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் அணியை வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுவிடும்.
இந்த புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணிக்கு அடுத்த இடத்தில் உள்ள ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் உள்ளன. இதில் எந்த அணி வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.