சுந்தரமகாலிங்கம் சுவாமி மூலவர் சன்னதியில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதியில் ஆனந்தவல்லி அம்மன் அருள்பாலிக்கிறார். மலைப்பாதையில் சந்திரகாந்தேஸ்வரர், சங்கரநாராயணர், ராமதேவர், வள்ளி தெய்வானை சமேத முருகன், விநாயகர் போன்ற பல தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.
சதுரகிரி கோவிலுக்கு மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வத்திராயிருப்பு வழியாகவும், தேனி மாவட்டத்தில் இருந்து வருசநாடு வழியாகவும் சதுரகிரி மலையை அடையலாம்.