ஆறுபடை வீடுகளில், கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் கோவில் தான். சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் இதுவாகும். சூரனை வென்றதால், "ஜெயந்திநாதர்" என்ற பெயரில் இங்கு முருகன் அருள்பாலிக்கிறார்.
மூலவர் சந்நிதியின் பின்புறம் ஐந்து லிங்கங்கள் உள்ளன. முருகனின் முக்கிய படைத்தலைவனான வீரபாகுவுக்கு தனி சன்னதி உள்ளது. சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், நாக தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கடல் அலைகள் கோவிலின் கருவறை வரை வந்து செல்வது இங்கு ஒரு சிறப்பம்சமாகும். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருச்செந்தூர் கோவிலை பற்றி 83 பாடல்கள் பாடியுள்ளார்.