மே 5ஆம் தேதி சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போது செல்லலாம்?
செவ்வாய், 2 மே 2023 (19:46 IST)
வரும் நான்கு மற்றும் ஐந்தாம் தேதி சித்ரா பௌர்ணமி நிகழ இருக்கும் நிலையில் அன்றைய தினம் கிரிவலம் எப்போது செல்லலாம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சித்ரா பௌர்ணமி மே நான்காம் தேதி வியாழக்கிழமை இரவு 11:59 மணிக்கு தொடங்கி மே ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11 33 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே ஐந்தாம் தேதி பௌர்ணமி கிரிவலம் செய்ய உகந்த நாள் என்றும் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்றும் திருவண்ணாமலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்