நாளை பெளர்ணமி, திருவண்ணாமலை கிரிவலம் செய்ய தகுந்த நேரம் எது?
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (18:26 IST)
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் வழக்கம் பக்தர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் நாளை பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல சரியான நேரம் எது என்பது குறித்து ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி ஏப்ரல் 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.56 மணிக்கு நிறைவடைகிறது. எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்றால் அதிக பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இந்த கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.