திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா!

வியாழன், 20 ஏப்ரல் 2023 (18:47 IST)
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இந்த விழா தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 4 மணிக்கே விநாயகர் சன்னதி முன் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும் என்று தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளன. மேலும் மே நான்காம் தேதி வரை இந்த விழா நடைபெறும் என்றும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் பிரகாரத்தில் தங்க கொடிமரம் முன் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிகழ்ச்சிக்கு அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்