முடி உதிர்வதை நிறுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்...?
தேங்காய் எண்ணெய்யில் உள்ள அமிலங்களான லாரிக் மற்றும் கேப்ரிக் அமிலங்கள் உள்ளது. இவை பலவீனமான தலைமுடியை அதாவது முடியின் வேர்க்கால்களை வலிமையாக்குகிறது.
தேங்காய் எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி வாரம் 2 முறை மசாஜ் செய்து ஊறவைத்து குளிக்க வேண்டும்.
கற்றாழை ஜெல் அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் நல்ல பலன் அளிக்கும். தலைமுடி மெலிவதற்கு போதிய ஈரப்பசை இல்லாமையும், பொடுகு தொல்லை, ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் தான் காரணம்.
கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு ஒரு முறையாவது தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து பிறகு அலசினால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும். கூந்தலும் பட்டுப் போல இருக்கும்.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே அந்த நெல்லிக்காய் பொடியை நீரில் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி வந்தால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும். நெல்லிச்சாறை தேங்காய் எண்ணெயில் கலந்து லேசாக சூடு செய்து தலைமுடியில் தடவலாம்.
உருளைக்கிழங்கை தோலில் உள்ள மண் போக கழுவி அரைத்து வடிகட்டி சாறு எடுத்து, அதனை வாரத்திற்கு 2-3 முறை தலையில் தடவி ஊறவைத்து அலசி வர, தலைமுடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு, முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
விளக்கெண்ணெய்யும் ஓர் அற்புதமான தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் பொருள். இதற்கு இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் வலுவிழந்த தலைமுடியை சரிசெய்வதோடு, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியையும் கூட்டும்.