* தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இது இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைவு காரணமாகவும் ஏற்படுகிறது.
* மனவருத்தம், மனஉளைச்சலால் அவதிப்படுபவர்களுக்கு கருவளையம் ஏற்படுகிறது. எனவே எப்போதும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டால் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம்.
* அதிகப்படியான வேலை செய்பவர்களுக்கும் கருவளையம் ஏற்படும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதனை தடுக்க முடியும். உதாரணமாக வெளியே வெயிலில் செல்லும்போதும், கணினியில் வேலை செய்யும் போதும் கண்ணாடி அணிந்தால் கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.