அனைத்து சமையலிலும் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது, இது உணவு பொருளுக்கு சுவையையும், மணத்தையும் தரக் கூடியது. இது உணவு பொருள்களில் மட்டுமில்லாமல் தேநீர் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஏலக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, பி, சி, போன்றவை அதிக அளவில் உள்ளன. ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படுவதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் நெஞ்சில் சளி பிரச்சனை உள்ளவர்கள், மூச்சு விடுவதற்கு சிரமப்படுபவர்கள், சளி, இருமல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீயை குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
தலைவலி அடிக்கடி வந்தால் அந்த சமயத்தில் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் தலைவலி விரைவில் குணமடையும். செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் அஜீரணக் கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும்.
ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகளில் இருந்து விடுதலை ஆக்குகிறது. மேலும் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள், இந்த டீயை குடித்து வந்தால் தலைவலி விரைவில் குணமடையும்.