கற்றாழை ஜெல் முகப்பரு மற்றும் முகப்பரு தழும்புகளைப் போக்க மட்டுமின்றி, ஸ்ட்ரெட்ச் மார்க்களையும் மறைய வைக்க உதவுகிறது. மேலும் சருமத்தை ஊட்டமளித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். கற்றாழை ஜெல்லை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு அதனை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.
கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் காயங்கள், வீக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே தினமும் இரவு கற்றாழை ஜெல்லை சருமத்தில் அப்ளை செய்து பின்னர் மறுநாள் காலை கழுவி வந்தால் சருமம் பொலிவாகும்.