பளபளப்பான சருமத்தை பெற வாழைப்பழ பேஷியல்!!

சனி, 17 செப்டம்பர் 2022 (12:36 IST)
அழகான, பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்.


இதற்காக நாம் பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். சிலர் பேஷியல் மூலம் சரும பொலிவை பெற முயற்சி செய்கிறார்கள். பேஷியல் செய்வதால், முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, இறந்த சரும செல்கள் எளிதில் அகற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும்.

வீட்டில் வாழைப்பழ ஃபேஷியல் செய்ய முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். முகத்தை சுத்தம் செய்த பிறகு முகத்தை ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும். ஸ்க்ரப் செய்ய, பால் பவுடரை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ரவை, எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இப்போது ஒரு வாழைப்பழத் தோலை எடுத்து, இந்தக் கலவையை தோலின் மீது தடவவும். அதை முகம் முழுவதும் நன்றாக தேய்க்கவும்.

இதற்குப் பிறகு, 5 நிமிடங்களுக்கு கைகளால் லேசாக ஸ்க்ரப் செய்த பிறகு, தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும். இது முகத்தை ஆழமாக சுத்தம் செய்வதோடு, இறந்த சரும செல்களும் அகற்றப்படும். இது முகத்திற்கு இயற்கையான பொலிவை தரும்.

ஸ்க்ரப்பிங் செய்த பிறகு, பேஷியலின் அடுத்த கட்டம் முக மசாஜ் ஆகும். இதற்கு அரை வாழைப்பழம், தேன், எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும். இவை அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அதன் பிறகு இந்த கலவை கொண்டு உங்கள் முகத்தை மசாஜ் செய்யவும். இது முகத்தை மென்மையாக மாற்றும்.

வாழைப்பழத்தில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. வாழைப்பழம் சருமத்தின் வறட்சியை நீக்க உதவுகிறது. இதனுடன், இது முகப்பரு மற்றும் மருக்களை நீக்குகிறது. வாழைப்பழ ஃபேஸ் பேக் செய்ய, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் தூள், அரை வாழைப்பழம், தேன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் அனைத்தையும் நன்கு கலந்து, நன்றாக பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்