பெரும்பாலான தாய்மார்களுக்கு குழந்தையின் அழுகையை நிறுத்துவது என்பது பெரும் சவாலான காரியமாக இருக்கும். குறிப்பாக வெளியே எங்கேயாவது சென்று இருக்கும்போது திடீரென குழந்தை அழுதால் அந்த குழந்தையின் அழுகையை நிறுத்துவது எப்படி என்று தெரியாமல் தாய்மார்கள் திணறுவார்கள்,
பசி, சோர்வு, வயிற்றுவலி, வாயு தொல்லை, டயப்பர் ஈரமாவது, அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் அழும். எனவே குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கண்டுபிடித்து அதனை உடனடியாக சரி செய்தால் குழந்தையின் அழுகை உடனே நின்று விடும்.
குழந்தை தொடையை வயிற்றில் மடித்து வைத்தபடி அழுதால் வயிற்று வலி என்று அர்த்தம். அதிகப்படியான காற்று குழந்தைகள் வயிற்றுக்கு சென்றாலும் குழந்தை அழும், எனவே பாலூட்டியவுடன் குழந்தையை தோளில் சாய்த்தவாறு லேசாக தட்டிக் கொடுத்தால் காற்று வெளியேறிவிடும்.