வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் உடலில் பல அதிசயமான மாற்றங்கள் நடக்கும் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளரிக்காயில் வைட்டமின் கே அதிக அளவில் இருப்பதால் தினமும் ஒரு ஜூஸ் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றும் பல்வேறு நோய்களை இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் சரி செய்யும் என்று கூறப்டுகிறது. கோடை காலத்தில் தாகம் அதிகம் இருக்கும் என்பதால் அவ்வப்போது வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் நீர்ச்சத்து அதிகம் கிடைப்பதோடு வைட்டமின் சி கிடைக்கும் என்பதும் அதேபோல் பொட்டாசியம் கால்சியம் ஆகிய சத்துக்களும் உடலுக்கு தேவையான அளவு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.