சமூக வலைத்தளங்கள் மக்கள் மூழ்கியிருக்கும் நிலையில், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள வாட்ஸ் ஆப் எளிமையான ஒன்றாக உள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப்பின் மூலம் செய்தி அனுப்புதல், போட்டோ மற்றும் வீடியோ அனுப்புதல், அழைப்புகள் மேற்கொள்ளுதல் ஆகியவை எளிமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆம், ஹேக்கர்கள் வாட்ஸ் ஆப் மூலம் கால் செய்கிறார்கள், அப்போது தானாகவே உங்களது ஸ்மார்ட்போனை கண்காணிக்கும் சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிவிடும்.