மீண்டும் விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: டபுள் டிஸ்கவுண்ட்
திங்கள், 13 மே 2019 (14:07 IST)
கொரிய நிறுவனமான சாம்சங் தனது ஸ்மார்ட்போன்கள் மீதான விலை குறைப்பை அவ்வப்போது வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலையை ஏப்ரல் மாதத்தில் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
1. கேலக்ஸி ஏ9 6 ஜிபி ராம், 128 ஜிபி ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.28,990 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.31,990-க்கு விற்கப்பட்டது.
2. கேலக்ஸி ஏ7 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.3000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் 128 ஜிபி மாடல் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இது ரூ.22,990-க்கு விற்கப்பட்டது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு:
1. சாம்சங் கேல்கஸி ஏ ஸ்மார்ட்போன் விலை ரூ.1500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
2. சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது.
3. சாம்சங் கேலக்ஸி ஏ320 ஸ்மார்ட்போன் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.