வாட்ஸ்அப்-க்கு போட்டியாக களமிறங்கிய சிக்னல் பிரைவேட் மெஸன்ஜர்

திங்கள், 3 ஏப்ரல் 2017 (18:42 IST)
வாட்ஸ்அப்-க்கு போட்டியாக சிக்னல் பிரைவேட் மெஸன்ஜர் என்ற புதிய அப் களமிறங்கியது. வாட்ஸ்அப் போன்ற அடையாளம் மற்றும் அதே போன்று வசதிகளை கொண்டுள்ளது.


 

 
வாட்ஸ்அப் பயன்படுத்தாத ஸ்மாட்போன் பயனாளர்கள் மிக குறைவு. வட்ஸ்அப் மிகவும் பிரபலமான ஒன்று. இதை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிரகு நிறைய மாற்றங்களை செய்து அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக சிக்னல் பிரைவேட் மெஸன்ஜர் என்ற புதிய அப் களமிறங்கியது. வாட்ஸ்அப் போன்ற அடையாளம் கொண்ட இந்த செயலி வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. 
 
அனைவரும் பயன்படுத்த மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது HIKE செயலி பயன்படுத்தி வந்தவர்கள் அதிலிருந்து இந்த Signal Private Messenger செயலிக்கு மாறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்