ஜியோ 3 இன் 1 காம்போ: சிங்கிள் பேமெண்ட்; டிரிப்பிள் என்ஜாய்மெண்ட்!!

வியாழன், 25 ஏப்ரல் 2019 (18:52 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்டது. 
 
ஜியோ ஜிகாஃபைபர் சேவை தற்சமயம் பிரீவியூ சலுகையாக வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. இதனை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 பாதுகாப்பு கட்டணமாக செலுத்த வேண்டும். 
 
ஆனால் இப்போது ஜியோ, ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஆகியவற்றை ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஜியோ ஜிகாஃபைபருடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன், டி.வி. என மூன்று சேவைகளும் ரூ.600 கட்டணத்தில் வழங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. 
 
ஏற்கனவே ஜியோ ஜிகாஃபைபர் பயன்படுத்துவோருக்கு லேண்ட்லைன் மற்றும் தொலைகாட்சி சேவைகள் அடுத்த 3 மாதங்களில் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஒரு ஆண்டிற்கு இலவசம் என்றும் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்