இந்நிலையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதவாது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இதனால் யாருக்கு லாபம் என வணிக வல்லூநர்கள் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி, கொரோனா வைரஸ் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், டிஜிட்டல் சந்தையில் 900 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில், இரு தரப்புக்கும் இது வெற்றியாக இருக்கும் என கூறப்படுகிறது.