மற‌க்க முடியாத பாட‌ல்க‌ள்

சனி, 23 அக்டோபர் 2010 (14:48 IST)
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, பாடி அழைத்தேன். இ‌தி‌ல் நெஞ்‌சி‌ல் ‌நீ‌ங்‌காது இட‌ம் ‌பிடி‌த்த திரை இசைப் பாடல்களையும், தங்கள் இசை அனுபவங்களையும் பின்னணிப் பாடகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தாங்கள் திரைப்படத்தில் பாடி வெளிவந்து ரசிகர்களின் காதுகளை தாலாட்டிய பாடல்களையும், மற்ற பின்னணிப் பாடகர்கள் பாடி தங்களை தாலாட்டிய பாடல்களையும் பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம், தமிழர்களிடம் நல்ல இசை ரசனையை வளர்ப்பதே.

பாடி அழைத்தேன் நிகழ்ச்சியை இந்த வாரம் அலங்கரிப்பவர் பின்னணிப் பாடகி டி.கே.கலா. தனது நீண்ட இசைப்பயணத்தில் நிகழ்ந்த பல சுவையான அனுபவங்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.

டி.கே.கலா பாடி, கேட்பவர் நெஞ்சங்களை எல்லாம் தாலாட்டிய போய்வா நதி அலையே பாடல், பி.சுசீலா பாடி, டி.கே.கலாவுக்கு மிகவும் பிடித்த உன்னை ஒன்று கேட்பேன் பாடல் என இப்படி பல பாடல்களை பாடிக்காட்டி நிகழ்ச்சியை காண்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்