ர‌ஜி‌னி ப‌ற்‌றி மன‌ம் ‌திற‌க்‌கிறா‌ர் அ‌ண்ண‌ன்

சனி, 23 அக்டோபர் 2010 (14:37 IST)
ப‌ல்வேறு தொலை‌க்கா‌ட்‌சி அலைவ‌ரிசைக‌ளி‌ல் த‌ற்போது ஏராளமான தொட‌ர்க‌ள் ஒ‌ளிபர‌ப்பா‌கி வரு‌கி‌ன்றன. த‌ற்போது வச‌ந்‌த் டி‌வி‌யி‌ல் ‌ஒ‌ளிபர‌ப்பாக‌விரு‌க்கு‌ம் பு‌திய தொட‌ர் ர‌ஜி‌னி ப‌ற்‌றியது. இ‌ந்த ‌தொட‌ரி‌ல் ர‌ஜி‌னி‌யி‌ன் அ‌ண்ண‌ன் சத்ய நாராயணராவ் ர‌ஜி‌னி‌யின் சிறுவயதுப் பிராயம் தொடங்கி, அவர் வாலிபனாக வளர்ந்த கால கட்டம் வரை மனம் நெகிழ விவரிக்கும் தொடர் இது.

ரஜினி ரஜினி தான் என்ற தலைப்பில் ரஜினியின் முன்கதை சொல்லப்போகும் இந்த தொடரின் ஆரம்பமே மனதை கலங்கடிக்கும் தகவல் தான் சொல்லப்படுகிறது. ரஜினியின் 10 வயதில் அவரது அம்மா இறந்து போகிறார். இறக்கும்தறுவாயில் தன் மூத்த மகன் சத்யநாராயணராவை அழைத்தவர், சிறுவன் ரஜினியை அவர் கையில் ஒப்படைத்து, தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள். அவனை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு உனக்குத்தான் என்று கூறிவிட்டே கண் மூடியிருக்கிறார்.

இ‌ப்படி தா‌ய்‌க்கு தாயாக இரு‌ந்து ர‌ஜி‌னிகா‌ந்‌தை வள‌ர்‌‌த்த அ‌ண்ண‌ன் ச‌த்ய நாராயணரா‌வ், தனது த‌ம்‌பி‌யி‌ன் வா‌‌‌ழ்‌க்கை வரலா‌ற்‌றை‌ப் புர‌ட்டு‌ம் ஒரு பு‌த்தகமாக இ‌ந்த தொட‌ர் அமையு‌ம்.

ர‌‌ஜி‌னி‌யி‌ன் வா‌ழ்‌க்கை‌யி‌ல் நட‌ந்த பல சுவார‌ஸ்யமான தகவ‌ல்களை ந‌ம்முட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்‌கிறா‌ர் ச‌த்ய நராயணரா‌வ்.

தீபாவ‌ளி முத‌ல் (நவம்பர் 5-ம் தேதி) ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம்தேதி வரை வசந்த் டிவியில் சத்யநாராயணராவின் இந்த பேட்டி ஒளிபரப்பாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்