ம‌க்க‌ள் டி‌வி‌யி‌ல் உழவர் சந்தை

செவ்வாய், 10 நவம்பர் 2009 (10:31 IST)
மக்கள் தொலைக்காட்சியில் வெள்ளி பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது, உழவர் சந்தை.

உழவுத் தொழிலுக்கு பயன்படும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நமது கிராமத்து விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள்.அப்படி ஒரு பொருள் இருப்பது மற்ற உழவர்களுக்கு தெரிந்தால் அவர்களும் பயன்படுத்தி பயனடைய முடியும்.

அப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் பொருட்களிலிருந்து உருவாக்கப்படும் புதிய உணவுப் பொருட்கள், மூலிகைகள், நுண்ணுயிர் உரங்கள் என்று உழவு சார்ந்த அனைத்து பொருட்களையும் உழவர்கள் வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையே உழவர் சந்தை ‌நிக‌‌ழ்‌ச்‌சியாகு‌ம்.

இதில் பழைய டிராக்டரும் விற்கலாம். புதிய விதை நெல் தேவை என்றாலும், கேட்கலாம். முழுக்க முழுக்க வேளாண் பெருமக்களுக்கான சந்தை. இதில் விளைபொருட்களை எங்கே சந்தைப்படுத்தலாம், விற்பதற்கு எது ஏற்ற நேரம் போன்ற தகவல்களையும் பெற முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்