த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌‌ள்

வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:43 IST)
தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சி தமிழ்ப் புத்தாண்டான தைத் திருநாளையொட்டி பேரதிர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.

போகி, தமிழ்ப் புத்தாண்டு என்று தொடங்கும் பொங்கல் கொண்டாட்டத்தில் நான்கு நாட்கள் வண்ணமயமான நிகழ்ச்சிகளை அள்ளி வழங்க உள்ளோம்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளின் பெயரில் மாபெரும் அரங்குகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

வண்ணமயமான உள் அரங்குகள், வெளிப்புற படப்பிடிப்புகள், மலேசியா நாட்டிற்குச் சென்று பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் என்று தொலைக்காட்சி வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு 96 மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது.

இந்த 96 மணி நேர நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் மக்கள் மனதில் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டின் போது தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் கின்னஸ் சாதனை நிகழ்த்தும் திட்டமும் மக்கள் தொலைக்காட்சியிடம் இருக்கிறது.

பொங்கலுக்குப் பின்னர் நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு புதிய பொலிவுடன் அடையாளம் மாறாமல் தமிழர்களின் மனங்களை மக்கள் தொலைக்காட்சி கவர இருக்கிறது என்றார் ராமதாஸ்.


வெப்துனியாவைப் படிக்கவும்