இது ஒரு மாலை நேர நகைச்சுவை பாடசாலை. பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்பட அவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க வருகிறார் 'லொள்ளு சபா' சுவாமிநாதன்.
webdunia photo
WD
ஆனால் இந்த மாணவர்களுக்கு நமது கோடம்பாக்கத்து நட்சத்திரங்கள் மேல் தீராத பிரியம். இவர்கள் தங்களை நட்சத்திரங்களாவே கற்பனை செய்து கொண்டு படிக்க வருகிறார்கள்.
அவர்களின் தங்லிஷ், தெலுங்குலிஷ் என அனைத்தையும் பொறுக்க முடியாமல் கண்டிப்பான வாத்தியாராக வலம் வருகிறார் சுவாமிநாதன்.
இங்கு நடக்கும் குளறுபடிகள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நகைச்சுவையுடன் காட்டுகிறார்கள். சினிமா மோகத்தில் நட்சத்திரங்களாகவே உருமாறிவிட கோடம்பாக்கம் இஸ்கூல் கலைகட்டுகிறது.
இவர்களுக்கு உறுதுணையாக, `கலக்கப்போவது யார்' வெற்றியாளர் சிவகார்த்திகேயன் சேர்ந்துகொள்ள 'கோடம்பாக்கம் இஸ்கூல்' உங்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்க தயாராகிவிட்டது.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் 20, சனிக்கிழமை முதல், இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.