பட்டாம்பூச்சிக்கு நிகழ்ச்சிக்கு விருது

திங்கள், 8 டிசம்பர் 2008 (12:14 IST)
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பட்டாம்பூச்சி நிகழ்ச்சி இந்த ஆண்டின் சிறந்த குழந்தைகள் நிகழ்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு சாந்தோம் விருது வழங்கப்பட உள்ளது.

தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைமையில் சென்னையில் இயங்கும் சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம், ஊடகத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சாந்தோம் விருது வழங்கி வருகிறது.

பத்து வயதுக்குள்ளான குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் பட்டாம்பூச்சி நிகழ்ச்சி அமைந்திருப்பதால் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தேர்வு செய்யப்பட்டள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்