‌திறமையை வள‌ர்‌‌க்கு‌ம் ஏ டூ இச‌ட்

மாணவ‌ர்க‌ளி‌ட‌ம் உ‌ள்ள ‌திறமைய வள‌ர்‌க்கு‌ம் ‌வித‌த்‌தி‌ல் ஜெயா டிவியில் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு சிறுவர்களுக்கான `ஏ டூ இசட் ஜஸ்ட் பார் கிட்ஸ்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மாணவர்களின் கணிதத் திறமையை வளர்த்து அவர்களை கணித மேதையாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

மேலு‌ம், கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் சிறுவர்களை இனம் கண்டு, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நாளைய மேதைக‌ள் என்ற பகுதியும் உண்டு.

பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, கீபோர்டு, மிருதங்கம், வயலின், வீணை போன்ற கர்நாடக இசை சம்பந்தப்பட்ட சிறுவர்களை இதன் மூலம் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதே இந்த பகுதியின் நோக்கம்.

வெப்துனியாவைப் படிக்கவும்