ஜெயா டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி கடிச்சா தங்கம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பாஸ்கி.
இது ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாகும். இதில் நேயர்கள் கலந்து கொண்டு கடி ஜோக்குகளை சொல்ல வேண்டும்.
நேயர்களின் வாக்குகளைப் பெற்று அதில் சிறந்த கடி ஜோக் சொன்னவர் தேர்வு செய்யப்படுவார். ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்த கடி ஜோக் சொல்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
நிகழ்ச்சியின் இடை இடையே தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச் சுவை காட்சிகள் காட்டப்படும். தினமும் சிரித்துக் கொண்டே தங்கம் வெல்லலாம்.