நடிகர்களைத் தேடும் கனா காணும் காலம்

Webdunia

புதன், 1 ஆகஸ்ட் 2007 (12:32 IST)
விஜய் டிவியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் தொடர் தற்போது அதிக ரசிகர்களைப் பெற்று வருகிறது.

இத்தொடரில் மேலும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக கடந்த 3 மாதங்களாக நடிகர் நடிகைகள் தேர்வு நடந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

225 பேரை முதல் கட்டமாக தேர்வு செய்து அதில் இருந்து நடிப்பும் சுட்டித் தனமும் கொண்ட பூர்னிமா, வைஷ்ணவி, ஹரிதா, தினேஷ், ரவிக்குமார், சரத்சந்தர், ரமேஷ், கிரண், ஸ்ரீராம், சிவா, ராகவேந்தர், ஆகிய 11 பேரை தேர்வு செய்துள்ளனர். இதில் பூர்னிமா, ராகவேந்தர், ஹரிதா, மூவரும் +2 படிக்கிறார்கள். சிவா, ஸ்ரீராம், கிரன் மூவரும் பட்டப் படிப்பு 2-ம் ஆண்டு படிக்கிறார்கள். ரவிக்குமார், சரத்சந்தர் இருவரும் நடிப்பதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்துள்ளனர்.

இவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து சிறப்பு மேக்கப் செய்து தயார்படுத்தியுள்ளனர். இவர்கள் வினீத் கோஷ்டியையும் பாலா கோஷ்டியையும் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதை வரும் வாரங்களில் காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்