எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்

வெள்ளி, 6 நவம்பர் 2009 (11:55 IST)
பய‌ணிக‌ளி‌ன் கூ‌ட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர்-நெல்லை இடையே நாளை (சனிக்கிழமை) முதல் பகல் நேரத்தில் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதன்படி, 7, 11, 15-ந் தேதிகளில் எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (டி.என்.0603) இரவு 10.15 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

இதே போல், மறுமார்க்கத்தில், 8, 12, 16 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (டி.என்.0604) அதே நாள் இரவு 10.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய இடங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்