‌சில ‌‌விரைவு ர‌யி‌ல்க‌ளி‌ன் புற‌ப்படு‌ம் நேர‌ம் மா‌ற்ற‌ம்

சனி, 31 அக்டோபர் 2009 (11:14 IST)
பாண்டியன், முத்துநகர், செந்தூர் ‌விரைவு ர‌யி‌ல்க‌ள் ரயில்கள் உள்பட பல ரயில்களின் புறப்படும் நேரம் நவ‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தியான ஞாயிற்றுக்கிழமை முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய ரயில்வே கால அட்டவணையில், சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் பல ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் நவம்பர் 1-ந் தேதி முதல் (நாளை) அமலுக்கு வருகிறது.

சென்டிரலில் இருந்து புறப்படும் ரயில்கள்

தன்பாத்-டாடா - ஆலப்புழா ‌விரைவு ர‌யி‌ல் காலை 3.45 மணிக்கு பதில் 20 நிமிடம் முன்னதாக 3.25 மணிக்கு புறப்படும்.

கவுகாத்தி - பெங்களூர் ‌விரைவு ர‌யி‌ல் காலை 4.50 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 4.40 மணிக்கு புறப்படும்.

கவுகாத்தி - திருவனந்தபுரம் ‌விரைவு ர‌யி‌ல் காலை 4.50 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 4.40 மணிக்கு புறப்படும்.

கவுகாத்தி - எர்ணாகுளம் சந்திப்பு ‌விரைவு ர‌யி‌ல் காலை 4.50 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 4.40 மணிக்கு புறப்படும்.

திருவனந்தபுரம் - கவுகாத்தி ‌விரைவு ர‌யி‌ல் காலை 6.30 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20 மணிக்கு புறப்படும்.

பெங்களூர் - கவுகாத்தி ‌விரைவு ர‌யி‌ல் காலை 6.30 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20 மணிக்கு புறப்படும்.

எர்ணாகுளம் சந்திப்பு - பாட்னா ‌விரைவு ர‌யி‌ல் காலை 6.30 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20 மணிக்கு புறப்படும்.

ஜெய்ப்பூர் - கோவை ‌விரைவு ர‌யி‌ல் காலை 11 மணிக்கு பதில் 50 நிமிடம் முன்னதாக 10.10 மணிக்கு புறப்படும்.

சென்னை - பெங்களூர் ‌விரைவு ர‌யி‌ல் மதியம் 1.20 மணிக்கு பதில் 15 நிமிடம் தாமதமாக 1.35 மணிக்கு புறப்படும்.

சென்னை - வாஸ்கோடகாமா ‌விரைவு ர‌யி‌ல் மதியம் 1.40 மணிக்கு பதில் 30 நிமிடம் தாமதமாக 2.10 மணிக்கு புறப்படும்.

சென்னை - ஹூப்ளி ‌விரைவு ர‌யி‌ல் மதியம் 1.40 மணிக்கு பதில் 30 நிமிடம் தாமதமாக 2.10 மணிக்கு புறப்படும்.

பெங்களூர் - தர்பங்கா பக்மடி ‌விரைவு ர‌யி‌ல் மதியம் 3.25 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3.30 மணிக்கு புறப்படும்.

பெங்களூர் - பாட்னா சங்கமித்ரா ‌விரைவு ர‌யி‌ல் மதியம் 3.25 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3.30 மணிக்கு புறப்படும்.

சென்னை - பெங்களூர் லால்பாக் ‌விரைவு ர‌யி‌ல் மதியம் 3.30 மணிக்கு பதிலாக 3.35 மணிக்கு புறப்படும்.

சென்னை - திருவனந்தபுரம் ‌விரைவு ர‌யி‌ல் மாலை 4 மணிக்கு பதில் 35 நிமிடம் முன்னதாக 3.25 மணிக்கு புறப்படும்.

சென்னை - கூடூர் பயணிகள் ரயில் மாலை 4.10 மணிக்கு பதிலாக 4 மணிக்கே புறப்படும்.

சென்னை - மங்களூர் ‌விரைவு ர‌யி‌ல் ரயில் (செவ்வாய் தவிர) மாலை 5 மணிக்கு பதிலாக 4.10 மணிக்கே புறப்படும்.

சென்னை - ஜெய்ப்பூர் ‌விரைவு ர‌யி‌ல் மாலை 5.30 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு புறப்படும்.

சென்னை - கங்கா காவேரி ‌விரைவு ர‌யி‌ல் மாலை 5.30 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு புறப்படும்.

கோவை - ஜெய்ப்பூர் ‌விரைவு ர‌யி‌ல் மாலை 5.30 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு புறப்படும்.

சென்னை - நாகர்கோவில் ‌விரைவு ர‌யி‌ல் மாலை 6.05 மணிக்கு பதில் 10 நிமிடம் தாமதமாக 6.15 மணிக்கு புறப்படும்.

சென்னை - திருவனந்தபுரம் மெயில் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7.45 மணிக்கே புறப்படும்.

சென்னை - மங்களூர் மெயில் இரவு 8.15 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கே புறப்படும்.

சென்னை - கோவை ‌விரைவு ர‌யி‌ல் இரவு 10.20 மணிக்கு பதிலாக 10.30 மணிக்கு புறப்படும்.

சென்னை - ஈரோடு ஏற்காடு ‌விரைவு ர‌யி‌ல் இரவு 10.30 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும்.

ஆலப்புழா - டாடா-தன்பத் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 10.35 மணிக்கு பதில் இரவு 11 மணிக்கு புறப்படும்.

திருவனந்தபுரம் - கோரக்பூர் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.

திருவனந்தபுரம் - கோர்பா ‌விரைவு ர‌யி‌ல் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.

எர்ணாகுளம் - பராணி ‌விரைவு ர‌யி‌ல் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.

திருவனந்தபுரம் - இந்தூர் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.

சென்னை - ஹவுரா மெயில் இரவு 11.35 மணிக்கு பதிலாக 11.40 மணிக்கு புறப்படும்.

கோரக்பூர் - திருவனந்தபுரம் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.

கோர்வா - திருவனந்தபுரம் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.

பராணி - எர்ணாகுளம் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.

இந்தூர் - திருவனந்தபுரம் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.

எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள்

சென்னை - மதுரை வைகை ‌விரைவு ர‌யி‌ல் மதியம் 12.25 மணிக்கு பதில் 15 நிமிடம் தாமதமாக 12.40 மணிக்கு புறப்படும்.

சென்னை - திருச்சி பல்லவன் ‌விரைவு ர‌யி‌ல் மதியம் 3.30 மணிக்கு பதில் 15 நிமிடம் தாமதமாக 3.45 மணிக்கு புறப்படும்.

நிஜாமுதின் - மதுரை தமிழ்நாடு சம்பக்கிராந்தி ‌விரைவு ர‌யி‌ல் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு பதில் 6.35 மணிக்கே புறப்படும்.

நிஜாமுதின் - கன்னியாகுமரி திருக்குறள் ‌விரைவு ர‌யி‌ல் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு பதில் 6.35 மணிக்கே புறப்படும்.

சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி ‌விரைவு ர‌யி‌ல் இரவு 7.05 மணிக்கு பதிலாக 7.15 மணிக்கு புறப்படும்.

சென்னை - தூத்துக்குடி முத்துநகர் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.35 மணிக்கு புறப்படும்.

ஹவுரா - திருச்சி ‌விரைவு ர‌யி‌ல் இரவு 8.25 மணிக்கு பதிலாக 8.20 மணிக்கே புறப்படும்.

ஹவுரா - கன்னியாகுமரி ‌விரைவு ர‌யி‌ல் இரவு 8.25 மணிக்கு பதிலாக 8.20 மணிக்கே புறப்படும்.

சென்னை - மதுரை பாண்டியன் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 9.40 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும்.

சென்னை - திருச்செந்தூர் செந்தூர் ‌விரைவு ர‌யி‌ல் (வாரம் ஒருமுறை) மாலை 3.40 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் முன்னதாக 2.40 மணிக்கே புறப்படும்.

சென்னை - சேலம் ‌விரைவு ர‌யி‌ல் இரவு 11.20 மணிக்கு பதிலாக 11 மணிக்கே புறப்படும் எ‌ன்று அ‌ட்டவணை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்