வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பொதுமக்களின் பார்வைக்காக நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் சரணாலயமாகத் திகழ்கிறது.
இந்த ஆண்டு முன்கூட்டியே பறவைகள் வேடந்தாங்கலுக்கு வரத் துவங்கிவிட்டன. இப்போது சுமார் 15,000க்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் சரணாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த காரணத்தினால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை முன்னதாகவேத் திறந்துவிட வனத்துறையினர் திட்டமிட்டனர்.
அதன்படி வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் சரணாலயத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பறவைகள் சரணாலயம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 5 ரூபாயும், 3 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ. 2ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.