திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

புதன், 2 டிசம்பர் 2009 (11:20 IST)
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திரு‌விழா‌வி‌‌ல் நே‌ற்று மு‌க்‌கிய ‌நிக‌ழ்‌ச்‌சியாக மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் 15 லட்சம் பக்தர்கள் கலந்தகொண்டு தீபத்தை வழிபட்டனர். தொலை‌க்கா‌ட்‌சிக‌‌ள் வா‌யிலாக ஏராளமானோ‌ர் ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்தே கா‌ர்‌த்‌‌திகை ‌தீப‌த்தை வ‌ழிப‌ட்டன‌ர்.

தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலுக்குள் நே‌ற்று அ‌திகாலை பரணி தீபம் ஏற்றுதலும், மாலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுதலும் நடந்தது.

திருவ‌ண்ணாமலை மகா தீபத்தை காண வெ‌ளியூர்களில் இருந்து ஏராளமான கூட்டம், கூட்டமாக வந்‌திரு‌ந்தனர். இதனால் திருவண்ணாமலை நகர வீதிகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்பட்டது.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சமூர்த்திகளை சன்னதியில் இருந்து வெளியே கொண்டு வந்து மண்டபத்தில் வைத்தனர். மாலை 5.59 மணிக்கு சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து 6 மணிக்கு கோவில் வளாகத்தில் அகண்ட தீபம் ஏற்பட்டது.

அதே நேரம் 2,668 அடி உயர மலை உச்சியில் தயாராக நெய் ஊற்றி வைக்கப்பட்டு இருந்த ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திலும், வெளியேயும் கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

அப்போது கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நின்ற இடத்திலேயே தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வணங்கினார்கள். மலை உச்சியில் தீப ஜோதி தெரிந்தவுடன் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள், கடைகளிலும் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வணங்கினார்கள்.

இந்த தீப திருவிழாவுக்கு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இந்த விழாவில் 15 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு தீபத்தை தரிசனம் செய்ததாக பக்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தீப தரிசன மண்டபம் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முக்கிய நபர்கள் கோவிலுக்குள் செல்லும் அம்மணி அம்மன் கோபுரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்