வைகாசிப் பொறந்தாச்சு, ஆத்தா உன் கோயிலிலே, தூது போ செல்லக்கிளியே, தெற்குத்தெரு மச்சான், பொண்டாட்டி ராஜ்யம், தைப் பொறந்தாச்சு, பரசுராம் உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த கே.பிரபாகரனின் அன்பாலயா பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து தயாரித்து வரும் படம் - பழனியப்பா கல்லூரி.
கதாநாயகனாக பிரதீப் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக மதுஷாலினி, அர்ஜுமான் மொகல், அட்சயா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ரோகிணி, ஷகீலா, கஞ்சா கருப்பு, `சண்டைக்கோழி' ராஜா, தரணி, பாபூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்காக அண்மையில் கிளுகிளுப்பான ஒரு காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது.
பார்த்திபனும் மல்லியும் பக்கத்து பக்கத்து வீடு! அதனால் பார்த்திபன் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் மல்லி, பார்த்திபன் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் பார்த்திபனோ அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். அவனை எப்படியாவது தன்னை காதலிக்க வைக்க வேண்டும் என்ற திட்டத்தோடு, குழிபனியாரத்தை எடுத்துக் கொண்டு பார்த்திபன் வீட்டுக்கு செல்கிறாள் மல்லி. சமையல்கட்டில் வேலையாய் இருக்கும் பார்த்திபனின் அம்மா, "பார்த்திபன் ரூமில்தான் இருக்கிறான். நீயே அவனிடம் போய் கொடு" என்கிறாள். அதைக் கேட்டு உற்சாகமாகும் மல்லி, அறைக்குள் இருக்கும் பார்த்திபனிடம் சென்று குழிபனியாரத்தை நீட்டுகிறாள்.
"என்ன அது?" என்று பார்த்திபன் கேட்க, "பார்த்தால் தெரியலை? குழிபனியாரம்!" என்கிறாள் மல்லி.
"அப்படியா? எனக்கு வேண்டாம்" என்கிறான் பார்த்திபன்.
"என்னது? என் குழிபனியாரம் வேண்டாமா? நானே சுட்ட பனியாரம்" என்று கெஞ்சுகிறாள் மல்லி.
"உன் பனியாரமா இருந்தால் நான் சாப்பிடணுமா? வேண்டாம்! மொதல்ல இடத்தைக்காலி பண்ணு நான் படிக்கணும்" என்று அவளை விரட்டுகிறான்.
மல்லியோ, "நான் சுட்ட குழிபனியாரத்தை தொட்டு பாருய்யா? எவ்வளவு ஸாஃப்ட்டா இருக்கு தெரியுமா?" என்று தான் கொண்டு வந்த குழிபனியாரத்தை அவனை சாப்பிட வைக்க முயற்சி செய்கிறாள்.
இப்படி ஒரு காட்சி `பழனியப்பா கல்லூரி' படத்துக்காக படமாக்கப்பட்டது. பார்த்திபனாக புதுமுகம் பிரதீப்பும், மல்லியாக புதுமுகம் மதுஷாலினியும், பார்த்திபனின் அம்மாவாக ரோகிணியும் நடித்தனர்.
இசை: `ஜெயம்' பட்நாயக், ஒளிப்பதிவு: சீனு, பாடல்கள்: பா.விஜய், நா.முத்துகுமார், யுகபாரதி, காளிதாசன், கபிலன், பவன், கலை: மோகனமகேந்திரன், நடனம்: சிவசங்கர், பாலாஜி, சண்டைப்பயிற்சி: ஜாகுவார் தங்கம், வசனம்: கிருஷ்ணா டாவின்ஸி, தயாரிப்பு நிர்வாகம்: முனிரத்னம், இணை தயாரிப்பு: ஐஸ்வர்யாபாலு, கே.பாலகுமார்