பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்வாஸ் தனது பேன்கிரியாடிக் கேன்சரிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
சென்ற வருட இறுதியில் பேட்ரிக்குக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி சிகிச்சை எடுத்துக் கொண்டார் பேட்ரிக்.
சிகிச்சை என்றால் ரண வேதனை ஏற்படுத்தும் கீமோதெரபி. சிகிச்சை நாட்களை நினைவுகூரும் பேட்ரிக், அது வாழக்கையின் மிக மோசமான தினங்கள் என்கிறார்.
கீமோ தெரபியினால் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுகிறவர், மீண்டும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.