டூப் வேண்டாம் - அஜீத் சொன்ன விளக்கம்

சனி, 4 ஜனவரி 2014 (12:11 IST)
சில நடிகர்களைப் போல் ிஸ்க்கான காட்சிகளில் அஜீத் டூப்பை பயன்படுத்துவதில்லை. இது ஒருவகையில் நல்லது, இன்னொரு வகையில் தீயது.
FILE

ஒருவர் கஷ்டப்பட, வேறொருவர் கைத்தட்டல் வாங்குவது சரியல்ல. அந்தவகையில் அஜீத்தின் ிஸ்க் நல்லது. அதேநேரம் விபத்தில் சிக்கி சில நாட்கள் நடிக்க முடியாமல் போனால் அது ஒட்டு மொத்த படயூனிட்டையும் பாதிக்கும். பட்ஜெட் முதல் ரிலீஸ் தேதிவரை அனைத்தும் குழம்பிப்போக வாய்ப்புள்ளது.

ஆரம்பம் படத்தின் சண்டைக் காட்சியில் அஜீத்துக்கு காலில் அடிபட்டதும், அவர் சிகிச்சை எடுக்க வேண்டி வந்ததும் அனைவரும் அறிந்ததே. வீரம் படத்தின் ரயில் சண்டைக் காட்சியிலும் இதேபோல் ிஸ்க் எடுத்தார் அஜீத். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா டூப் பயன்படுத்தலாம் என்று சொன்னதையும் அவர் ஏற்கவில்லை. இதுபற்றி கூறிய சில்வா,

ிஸ்க்கான காட்சி அடிபடலாம், டூப் வைத்து எடுக்கலாம் என்றேன். ஆனால் அஜீத், டூப்புக்கும் என்னை மாதிரிதானே அடிபடும். அவருக்கும் வலிக்கும்தானே. இன்னொருத்தர் கஷ்டப்பட்டு நான் கைத்தட்டல் வாங்குவதற்கு நானே நடிக்கிறேன் என்று அவரே சண்டைக் காட்சியில் நடித்தார்.

வீரம் என்று சரியாகதான் பெயர் வைத்திருக்கிறார்கள்.


வெப்துனியாவைப் படிக்கவும்