அனிருத்தின் ஆர்வக் கோளாறு - படங்கள்

வியாழன், 2 ஜனவரி 2014 (12:59 IST)
நடிக்க மாட்டேன் என்ற அனிருத்தும் நடிகராகிவிட்டாரா? ஆக்கோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பந்தாவாக உட்கார்ந்திருக்கும் கொலவெறி இசையமைப்பாளரை பார்க்கையில் யாருக்கும் இந்த சந்தேகம் எழும். ஆக்கோ என்பது படமா? இசை ஆல்பமா?
FILE

ஆக்கோ என்பது முழுநீள திரைப்படம். எம்.ஷ்யாம் குமார் இயக்கத்தில் தீபன் பூபதி, ரதீஸ் வேலு தயாரித்திருக்கிhர்கள். மூன்று ஆர்வக்கோளாறு இளைஞர்கள் செய்யும் காரியத்தால் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. இதுவொரு ரொமாண்டிக் ஆக்சன் படம். ஆக்கோ என்பது ஆர்வக்கோளாறின் சுருக்கம்.

படத்தின் கதையை கேட்ட அனிருத் ரொம்ப ஆர்வத்துடன் படத்துக்கு இசையமைத்து தந்திருக்கிறார். அவரின் ஈடுபாட்டையும், இசையின் தரத்தையும் பார்த்த இயக்குனரும், தயாரிப்பாளர்களும் நெகிழ்ந்து போய் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் அனிருத்தையே பிரதானப்படுத்தி, இது அனிருத் நடிக்கும் படமோ என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர்.
FILE

அனிருத் இனியும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் இல்லை, வளர்ந்துவிட்ட இசையமைப்பாளர். ஆக்கோ சொல்லும் சேதி அதுதான்.

மேலும் படங்கள்:

FILE


FILE


FILE

FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்