ஜெய் ஆகாஷ் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரு படங்களை இயக்கி நடிப்பதாக அறிவித்திருக்கும் அவரின் இன்னொரு படம் அமாவாசை. பெயரிலிருந்தே இதுவொரு ஹாரர் திரைப்படம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
FILE
நான்கு இளம் ஜோடிகள் உல்லாச சுற்றுலா செல்கிறார்கள். இரவு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள். அந்த அமாவாசை இரவில் ஒரு ஜோடி மர்மமான முறையில் கொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து மற்ற ஜோடிகளுக்கு அமானுஷ்யமான சில தகவல்கள் கிடைக்கின்றன. இந்த கொலையை செய்தது யார்?
FILE
கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை சாகடித்த ஒரு நபரின் ஆவிதான் இந்த மரணத்துக்கு காரணம். தமிழ் ஆவி கதைகளுக்கான பாதையில் சற்றும் பிசகாமல் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ், சோனியா ஷாஷா நடித்துள்ளனர். கோட்டா சீனிவாசராவ், ஜீவா, ராபின், விவேக் ஆகியோரும் உண்டு.
FILE
படத்தை ராகேஷ் சாவந்த் இயக்கியுள்ளார். இளசுகளை கவரும் இளமைத் திருவிழாவுக்கு பஞ்சமில்லை என்கின்றன படத்தின் புகைப்படங்கள்.